கண்ணிலி - ஆதவன் தீட்சண்யா | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

கண்ணிலி - ஆதவன் தீட்சண்யா

ஓவியம் : ரமணன்

காலம்
என் கவிதையின் மீது
ஒரு துளி ரத்தத்தை
பொட்டெனச் சிந்தியது முதலில்
இதுவும் ஓர் அலங்காரமெனச் சிலிர்த்தபடி
ரத்தத்தின் மேலேயே 
நான் எழுதிக்கொண்டிருக்கையில் 
எங்கிருந்தாவது பதைபதைக்க ஓடிவரும் அது
கவிதையின் நிறமே மாறிப்போகுமளவுக்கு
ரத்தத்தை ஊற்றிப்போகத் தொடங்கியது
உனக்கேது இவ்வளவு ரத்தம் என்றால்
பதிலிறுக்காது தலைதெறிக்க ஓடிவிடும் காலம்
ஒருநாள்
பூமியே பொத்தலாகிப் பெருகிய ரத்தத்தை 
என் கவிதைக்குள் திருப்பிவிட்டது
வாழ்ந்திருக்க வேண்டியவர்களை
அவர்களின் ரத்தத்திலிருந்தே
உயிர்த்தெழுப்பும் பரிதவிப்பற்று 
இழியத்தொடங்குகிறது என் கவிதை
அழிபாடுகளுக்குப் பின்னான 
அரசாங்கத்தின் அறிக்கையென.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick