நிறம் குறையாத துயரங்கள் - மேதம் பகலவன்

சிக்கிறது.
இதை சொல்லத்தான் வேண்டும்
ஏனெனில்
பெற முடியுமளவு சேகரித்த தொகை மிச்சமில்லாமல்
செலவழிந்துவிட்டது.
போய் கண் காணாமல் சாகச் சொல்வீர்களென்பதும்
நான் அறிந்தேயிருக்கிறேன் ஆயினும் பசிக்கிறது
என் வயிறு
ஒரு நள்ளிரவு மாதிரி உங்களுக்கு நான் சுகமாயிருக்க முடியாது
சும்மா கிடந்ததற்கு உனக்கு சாவு சரியென
மனுதர்மம் வகுக்கலாம்
கேளுங்கள் என்னிடமிப்போது நீண்ட வாளில்லாமல் போகலாம்
இருந்தாலும்...
சட்டைகளைக் களைய முடியாது இரக்கம் சுரக்க
அழுக்காக வேண்டுமா நான்..?
நேற்றிரவு தேநீர்க் கடையில் நீங்கள் சொன்னதுதான்
‘யார் கேட்டாலும் நான் இல்லைன்னுலாம் சொல்ல மாட்டேன்’
வெட்கம் போன்ற இத்யாதிகளே இல்லாமல்
போய்விட்டேனென்று கணிக்கிறீர்களா
ஆகட்டும் பசிக்கிறது...
நம்பலாம். சராசரிக்கும் குறைவாகவே கொள்ளும் எனது இரைப்பை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்