மூகம்மா காடு - ஜெயராணி

ஓவியங்கள் : செந்தில்

சுமையை வெளுத்துப் பார்க்கும் வெயில் காலம். ஸ்ரீசைலம் என்ற அந்தச் சிறிய நகரம், சற்று அதிகமாகவே வெயிலூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது.

``மலை மேலயும் இவ்ளோ வெயில் தெரியுமா?!’’ உடலை நனைத்த பிசுபிசுப்பும் பயணக் களைப்பும் அலுப்புடன் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டின.
 
``ஏறக்குறைய நடுக்காட்டுக்குப் போகப் போறோம். போய்ச் சேரவும் ராத்திரியாகிடும். அந்நேரத்துக்கு பூமி குளிர்ந்திருக்கும்’’ என்றார் சோலையன். 

நடுக்காட்டில் குடியிருக்கும் பழங்குடி மக்களைச் சந்திக்க, இரவு நேரத்தில் போக நேரிடும் என நினைக்கவில்லை. ஆனால், பயணத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளால் இப்படி ஆகிவிட்டது.

``ராத்திரியில போறதுல ஒண்ணும் சிக்கல் இல்லையே?’’ - வந்த வேலை திட்டமிட்டபடி முடிய வேண்டும் என்ற பதற்றம் எனக்கு. இரண்டு நாள்களுக்குள் ஊர் திரும்பி, செய்திக் கட்டுரையைச் சமர்ப்பித்தாக வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick