இப்போது நாங்கள் ஐவர் - அ.முத்துலிங்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டேவிட் செடாரிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளரைப் பல தடவை சந்தித்திருக்கிறேன். அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன். அவருடைய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை. அவருடைய டைரிக் குறிப்புகள்தான். அவர் எழுதியவற்றை ஒரு தொகுப்பாக இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகத்தின் பெயர் Theft by Finding. தமிழில் ‘கண்டெடுத்த திருட்டு’ என்று சொல்லலாம். ஒரு பொருளைக் கண்டெடுத்தாலும் அது உங்களுடையது அல்ல, இங்கிலாந்தின் சட்டப்படி அது திருட்டுதான்.

ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவர் உலகத்தின் பல நகரங்களுக்குப் புத்தகச் சுற்றுலாவில் செல்வார். ஓர் இரவு மட்டுமே அந்த நகரத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் விமானம் ஏறி வேறு நகரத்துக்குச் சென்றுவிடுவார். ரொறொன்ரோ சுற்றுலாவுக்கு வரும்போது அவர் கூட்டங்களுக்குச் சென்று, அங்கே கூடும்  வாசகர் தொகையைக் கண்டு நான் பிரமித்திருக்கிறேன். ஒருநாள் அவரிடம் எப்படி உங்களுக்கு எழுதுவதற்குப் புதுப்புது  கருக்கள் கிடைக்கின்றன என்று கேட்டேன்.  “நான் பயணம் செய்யும்போதும், நூதனமான ஆட்களைச் சந்திக்கும்போதும் ஏதாவது தோன்றும் அல்லது எனக்குப் புதுவிதமான அனுபவம் ஏற்படும்போதும் எழுதுவதற்குக் கரு கிடைக்கும். அப்படி ஒன்றும் தோன்றாவிட்டால், என்னுடைய பழைய டைரிகளை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன். 1977-லிருந்து நான் டைரிக் குறிப்புகள் எழுதி வருகிறேன். டைரியை எழுதும்போது தோன்றாத ஒன்று பல வருடங்கள் கழித்துப் படிக்கும்போது வரும். உடனே எழுதுவேன். இதுவரை என் டைரி என்னைக் கைவிட்டதில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick