இன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன் | Interview with Tamil Poet Erode Tamizhanban - Vikatan Thadam | விகடன் தடம்

இன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படம் : க.பாலாஜி

வினாக்கள்?

“உயிர்ப்போடு இருக்கிறோம் என்பதன் அடையாளம்.”

வானம்பாடிகள்?

“புதுக்கவிதையில் பாரதி, பாரதிதாசன் வழியில் சமுதாய அரசியல் உள்ளடக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்தப் பயன்பட்ட ஓர் இயக்கம்.”

ஆத்மார்த்தமான சகபயணி?

“இன்குலாப்.”

திராவிடம்?

“இன உணர்வின் வழியாக ஒன்றுபடுவதற்கான ஒரு கொள்கை. இந்திய தேசியத்தின் உள்ளே ஒரு துணை தேசியத்தை வார்த்தெடுக்க முடியும் என்பதை நம்பும் இயக்கம்.”

வாசித்துக்கொண்டிருக்கும் நூல்?

“ ‘பறவை பார்த்தல்’ - கவிதை நூல்.”

பாப்லோ நெருதா?

“அரசியலுக்குக் கவிதையின் அழகையும் கவிதைக்கு அரசியலின் கம்பீரத்தையும் கொண்டுவந்த கவிஞன். என் மூத்த பையனின் பெயர்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick