அடுத்து என்ன? - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரு சமூகத்தின் வாழ்வை அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியோடு படைப்பாக்கம் செய்வது ஒரு கலையல்ல. அது ஒரு தரிசனம்.

தரிசனம், எழுத்து வல்லமையால் வாய்ப்பதல்ல; கற்றுக்கொண்ட உத்திகளால் வாய்ப்பதும் அல்ல; வாழ்வே ஒரு துறவெனும் விதி வந்து சேர்வதால் வசியப்பட்டுப் போவது. அதை எழுத்தாக்கம் செய்யும்போது படைப்பெனும் பரிமாணம் பெறுகிறது. ஒருவேளை இந்தக் ‘கர்ப்ப நிலம்’ என்ற நாவல், வாசிப்பவனுக்கு ஒரு தரிசனத்தைத் தந்தால், துர்விதியொன்று நல்விதியாக பரிவர்த்தனமாகி மகிமைகொள்ளலாம். என் வாழ்வுக்கு அது மகத்துவம் சேர்க்கலாம். ஒரு தவசியின் வரம்போல அப்போது அதை ஏற்றுக்கொள்வேன்.

அரசில்லாத மக்கள்சமூகங்கள், தம்மைச் சூழும் அரசியலால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி இந்த உலகம் கவனம் கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை. ஏனெனில், இது அரசுகளின் உலகம். அரசுள்ள மக்கள் சமூகங்களின் மனித வாழ்க்கைப்பாடுகள்தான் பேசப்படுகின்றன. பேசவைக்கப்படுகின்றன.

அரசிழந்த மக்கள்சமூகத்தில் தம்மைச் சூழும் அரசியலால் எப்படித் தனிமனிதர்கள் வாழ்க்கையில் தாக்கத்துக்கு உள்ளாகிறார்கள்; அவர்களின் வாழ்வுச் சிக்கல்கள் எங்கேயிருந்து பிறக்கின்றன; எப்படி வடிவம்கொள்கின்றன என்ற கண்ணோட்டத்தில், அவர்களின் வாழ்வை, கலைப்படைப்பாக முன்வைக்க எழுத்துலகமும் கலையுலகமும் தவறிவருகிறது. நைஜீரிய எழுத்தாளரும் போராட்டக்காரருமான சினுவா ஆச்சுபே இந்தக் கண்ணோட்டத்தில் படைப்பை அணுக முயன்றார் எனக் காண்கிறேன். இந்தக் கண்ணோட்டத்தில் அந்த மக்களின் துர்விதியான துயர்ப்பாடுகளை ஒரு வாசகன் அவரது படைப்புகளில் தரிசிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick