கரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்! - வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : கே.குணசீலன்

ஞ்சை ப்ரகாஷ்! 1980-90களில் தமிழகத்தின் கிழக்கு மண்டலத்தில் இலக்கியம் எழுதவந்த அத்தனை பேருக்கும் ஆதர்சமாக இருந்த பெயர். வாட்டசாட்டமான உருவம்,  முன் வழுக்கை, நீண்டு பேணப்பட்ட தாடி, அடர் மீசை, அகன்று சுடர்விடும் கண்கள், வேட்டிக்குப் பொருத்தமற்ற சட்டை எனத் தஞ்சை ப்ரகாஷைப் பார்த்தவுடனே சிறிதானதொரு மிரட்சி தோன்றும். பேசத் தொடங்கிவிட்டால் அவருக்குள்ளிருக்கிற குழந்தைத்தனங்களும், அதற்கு நேரெதிரான அறிவாளுமையும் நம்மையறியாமல் அவருக்கு நெருக்கமாக்கி கட்டிப்போட்டுவிடும்.

படைப்பாளியாக, இதழாளராக, இசைக் கலைஞனாக, ஓவியனாக மட்டுமின்றி, ஒரு தீவிர இலக்கியச் செயல்பாட்டாளராகவும் இருந்த தஞ்சை ப்ரகாஷ், கரமுண்டார் வீட்டில் பிறந்தவர். அவருடைய பூர்வீகக் கிராமத்தின் பெயர் கரமுண்டார் கோட்டை. பெரும் மதில்கள்கொண்ட அந்த வீட்டில், ஊரின் கதைகளையெல்லாம் சுமந்துகொண்டு உலவித்திரிந்த அப்பாயிகளிடமிருந்து கேட்டுப்பெற்ற தன் தொன்ம உறவுகளின் ஆளுமைகளைத்தான் தன் அடர்மொழியில் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் எழுதிக் குவித்தார் ப்ரகாஷ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick