“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்!” - சல்மா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : மீ.நிவேதன்

ள்ளிவாசலில் சிறப்பாக குர்ஆன் ஓதியதற்காகப் பரிசு பெற்ற பெண் ஒருவர், திடீரெனத் தொழுவதை நிறுத்திக்கொள்கிறார். அதன் பிறகு, தொழச் சொல்லி மிரட்டலாகவும் கெஞ்சலாகவும் வந்த கோரிக்கைகளை, அவர் சட்டை செய்யவே இல்லை. முறையாகத் தொழுதுகொண்டிருந்த அவரை அதிலிருந்து விலகச் செய்தவை, அவர் வாசித்த புத்தகங்கள்தான். சுற்றத்தார் அந்தப் புத்தகங்களை `சைத்தான்’ என அழைத்து, அதைத் தூக்கி எறியச் சொல்கிறார்கள். ஆனால், அவர் புத்தகங்களை முன்பைக் காட்டிலும் இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, கவிஞர் சல்மா!

``இயல்பாகவே எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. வாழ்க்கைச் சூழல்தான் அதை மேலும் மெருகேற்றியது. ஏழெட்டு வயதில் கிடைக்கும் காமிக்ஸ்களை, ‘பாலமித்ரா’, ‘அம்புலி மாமா’ போன்றவற்றைத்தான் முதலில் வாசிக்கத் தொடங்கினேன். காலப்போக்கில் தீவிரமான வாசகியானேன். 13 வயதிற்குப் பிறகு பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாது என்பதால், வீட்டில்தான் இருக்க வேண்டும். எனக்கு எப்போது திருமணம் ஆகும் எனத் தெரியாது. வீட்டில் சமைப்பதற்கும் மற்ற வேலைகளுக்கும் ஆட்கள் இருப்பார்கள். அதனால் 24 மணி நேரம் என்பது, எனக்குக் கொடுக்கப்பட்ட பெரிய தண்டனைபோல கடந்தது. அதை எப்படி எளிதாகக் கடத்துவது என்றே அப்போது எனக்குத் தெரியாது. வாசிப்புதான் எனக்குப் பெரும் துணையாக இருந்தது. நட்புவட்டமும் பெரிதாக இல்லை. ஏனென்றால், ஒன்பதாம் வகுப்பு வரை உடன் படித்தவர்கள் அனைவரும் இதுபோலவே அவரவர் வீட்டில் இருப்பதால், நட்பை வளர்க்கவும் முடியவில்லை. பேசுவதற்கு ஆள்களே இல்லை. அம்மா, அக்காவுடன் எதையும் பேச முடியவில்லை. புத்தகங்கள் மட்டும்தான் என் ஒரே நட்பு. என்னால் படிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தையும் கவலையையும் ஏமாற்றத்தையும் கடக்க, புத்தகங்கள்தான் உதவின.

நூலகம் என்பதே பெருங்கனவாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் 12-வது வயதில் எங்கள் ஊருக்குத் துணை நூலகங்கள் வந்தன. அதுவும் பள்ளிக்குச் செல்லும் வழியில்தான் அமைந்திருந்தது. பள்ளி முடிந்ததும் அங்குதான் செல்வேன். வீட்டுக்குத் தினமும் தாமதமாகச் செல்வதால், வீட்டில் வசவுகள் கிடைக்கும். வாசிப்பு மனநிலையில் அதைப் பொருட்படுத்துவதில்லை நான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick