"இலக்கியம் என்பதே பிரசாரம்தான்!” - இமையம்

சந்திப்பு: வெய்யில் படங்கள்: க.பாலாஜி

மிழ் நவீன இலக்கியத்தில் தொடர்ச்சியான, தீவிரமான இயக்கம் கொண்டவர் இமையம். மனித வாழ்க்கைப்பாடுகளின் கதைகளை ரத்தமும் சதையுமாகப் படைப்பாக்கம் செய்பவர்.

சென்னையிலுள்ள ஒரு விடுதியில் சந்தித்தோம். உயர்ந்த கட்டடத்தின் ஜன்னல் வழியே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரத்தைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார்.அந்தப் பார்வையில் பல விமர்சனங்கள் ஓடி மறைகின்றன. தூரத்தில் மெட்ரோ ரயில்கள் ஒரு விநோத பூச்சியைப்போல போவதும் வருவதுமாக இருக்க, அவரது கதாபாத்திரங்களைப்போலவே புன்னகையும் கோபமுமாக, பூச்சுகளற்ற அசலான மொழியில் பேசுகிறார்.  


“ ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதுவதற்கான அகத்தூண்டல் குறித்துச் சொல்லுங்கள்...”

“ஓர் அழுகுரல்... பரிதவிப்பான ஒரு தாயின் அழுகுரல். அந்த அழுகுரல், அந்தப் பெண்ணை மட்டுமல்ல, அவளுடைய வாழ்வையும், அவளுடைய வீட்டைச் சேர்ந்த மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும், என் வீட்டையும், என் வீட்டு மனிதர்களையும், என் தெருவின், ஊரின் மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும் பார்க்கச் சொன்னது. அந்த அழுகுரலின் வழியாகத்தான் நான் என் ஊரின் வரைபடத்தையும், சமூகத்தின் வரைபடத்தையும் பார்த்தேன். பார்த்ததை எழுதினேன். அதுதான் ‘கோவேறு கழுதைகள்’ நாவல். அப்போது எழுத்தாளன், எழுத்து, இலக்கியம் என்பது குறித்து எனக்குத் தெளிவான புரிந்துகொள்ளல் இருந்தது என்று சொன்னால், அது பொய். ‘ஒரு பெண் ஏன் அழுகிறாள்?’ என்று யோசித்தேன். அவ்வளவுதான்.

‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதுவதற்கு  எவை காரணமாக இருந்தனவோ அவையே என்னுடைய பிற கதைகளை எழுதுவதற்கும் அடிப்படையாக இருந்தன.”

என்னுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரக்கூடிய மனிதர்கள், என்னுடைய ஊரில் - தெருவில் உள்ளவர்கள்தான்; பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் நான் பார்த்தவர்கள், பழகியவர்கள்தான்; எனது வீட்டுக்கு அடிக்கடி வரக்கூடிய சராசரி மனிதர்கள்தான். என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும், வாழும் மனிதர்களையும் பற்றியே அதிகம் எழுதுகிறேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick