உயிரின் மெல்லிசை - ஜெ.பிரான்சிஸ் கிருபா

ஓவியம் : செந்தில்

கல் கனவுகள் விளையும்
பருவ வயல்களின்
துருவ வரப்புகளில் அமர்ந்திருக்கிறோம்
காட்சிகளை வருடியபடி
இமைகளைப்போல
எதிரும் புதிருமாக.

ஒரு நொடியில் விடிந்து
மறு நொடியில் அடையும்
மின்மினிப் பொழுதுகளில்
கரைந்துகொண்டிருக்கின்றன
சதா சர்வ காலமும்
செக்கச்சிவந்த கண்ணின் மணிகளும்

மூச்சுக்காற்றில் கொதிக்கும்
ஆத்திச்சூடியின் இளஞ்சூட்டில்
ஆடியசைகின்றன உன் வார்த்தைகள்
நீ பேசும்போது.

நாடி நரம்புகளெங்கும் இயல்பாக
முடிச்சுகளாகி இறுகுகின்றன
ஓசைப் பந்தெனத் துள்ளிச் செல்லும்
உன் பேச்சை
கேட்பதா பார்ப்பதா என்ற குழப்பம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick