சொல் - தர்மராஜ் பெரியசாமி | Poetry - Vikatan thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2018)

சொல் - தர்மராஜ் பெரியசாமி

ஓவியம் : செந்தில்

ரு சொல்லுக்கும்
இன்னொரு சொல்லுக்கும்
இடையேயான
இடைவெளியில்
ஓர் இலை துளிர்க்கிறது
ஒரு நிழல் அசைகிறது.

னிதர்களில்
அன்பானவர்கள்
தீயவர்கள்
கொடியவர்கள்
என்பவர் இலர்
அவை
சொற்கள்தாம்
அன்பானவை
தீயவை
அல்லது
கொடியவை.

ன் எதிரியைக் கொல்ல வேண்டுமா
முதலில்
உன் சொற்களைத் தீட்டு.

ரு சொல்லிலிருந்து
அதன் பொருளை எடுத்துவிடுவது
ஒரு மனிதனிலிருந்து
அவன் வாழ்வை எடுத்துவிடுவது
போலத்தான்
அதில் ஒன்றுமே இருப்பதில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க