இருண்ட உலகின் ஆன்மிக ஒளி - எம்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: புதுவை இளவேனில்

1987-ம் ஆண்டு. ‘கணையாழி’, ‘தீபம்’ போன்ற சிறுபத்திரிகைகளையும், நவீனத் தமிழ் இலக்கியத்தையும் வாசிக்கத் தொடங்கிய பருவம். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகே, நடைபாதையில் இருந்த புத்தகக் கடையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் தலைப்பு என்னைக் கவர்ந்தது. ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன.’ பாவண்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பு அது. ‘காவ்யா’ வெளியிட்டது. அதற்கு முன்பு பாவண்ணனின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், அந்தத் தலைப்பும் அதன் முகப்பும் என்னை ஈர்த்துவிட, அந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். சொல்லப்போனால், நான் சொந்தமாக வாங்கிய முதல் இலக்கியப் புத்தகம் அதுதான். அப்போது தொடங்கியது பாவண்ணனின் எழுத்துகளுடனான உறவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick