“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” - அர்ஜுன் டாங்ளே

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

ர்ஜுன் டாங்ளே - தலித் இலக்கியத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். மகாராஷ்டிராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் பேந்தர் (Dalit Panther) இயக்கம், தலித் இளைஞரணி அமைப்பு (Militanat Dalit youth organization) ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவர். ‘பாரதிய குடியரசுக் கட்சி’ (Bharatiya Republic Party)யின் தலைவராகவும் இருந்தவர். தற்போது, ‘குடியரசு ஜன சக்தி’யின் தலைவராக இருக்கிறார். டாங்லே எழுதிய பல கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1992-ம் ஆண்டு இவர் தொகுத்த ‘Poisoned Bread’ என்ற தலித் இலக்கியத் தொகுப்புதான், இந்திய மொழிகளில் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் தலித்திய எழுத்து. இந்தியாவில் தலித் மக்கள் பற்றிய ஆய்வுகளில் இத்தொகுப்பு முக்கிய இடம் வகிக்கின்றது. கவிதைகள், கதைகள், உண்மைச் சம்பவங்கள், வாழ்க்கைச் சரித்திரங்கள், விமர்சனக் கட்டுரைகள் என்ற பன்முகத்தன்மைகொண்ட இத்தொகுப்பின் சாராம்சம் 21-ம் நூற்றூண்டுக்கும் பொருந்தும். ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ மற்றும் ‘தலித் கவிதையியல்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த அர்ஜுன் டாங்ளேவுடன் உரையாடியதிலிருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick