“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன் | Interview With Writer A.Sivasubramanian - Vikatan Thadam | விகடன் தடம்

“சமூகப் பாதுகாப்பு இன்றைக்குக் கேள்விக்குரியதாக இருக்கிறது!” - ஆ.சிவசுப்பிரமணியன்

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: வீ.சதிஷ்குமார், அருள் பிரகாஷ்

மிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன். அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வருபவர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; நாட்டாரியலின் முன்னோடியான நா.வானமாமலையின் மாணவர்; பொதுவுடமைச் சிந்தாந்தத்தில் ஈடுபாடுகொண்டவர்; ஓய்வற்ற களப்பணியாளர்... மதுரையிலுள்ள தனது மகனின் வீட்டில் இப்போது வசித்துவருகிறார். எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைக்கான குறிப்புகள், இரண்டாம் பதிப்பிற்காகத் தயாராகிக்கொண்டிருக்கும் புத்தகமொன்றின் சரிபார்ப்புப் பக்கங்கள், பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் எனப் பரபரப்பாக இருக்கிறது அவரது எழுத்து மேசை. மாறாக, மிக நிதானமாகப் பேசுகிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick