அபார்ஷனில் நழுவிய காரிகை - ஷக்தி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

அபார்ஷனில் நழுவிய காரிகை - ஷக்தி

ஓவியம் : ரமணன்

ன் கருப்பை கருக்கொள்வதற்கென சில விதிகளைப் பின்பற்றுகிறது
நான் செய்தவை யாவும் சின்னஞ்சிறியவை, பெருஞ்சினம் ஆனால் அதற்கு
நார்க்கட்டிகள் களைந்து காலந்தாழ்ந்து கருவுற்ற பின்
பெண் மகவு வெறுத்து, அவன் செய்யவைத்த திசுச்சுரண்டலால் மட்டுமே
கருப்பையின் கழுத்து வழுவிழந்து துவண்டதிலிருந்து (அதன் விதிகள் அப்படித்தான்)
கருவை சிதைவெய்தச் செய்து புலப்படாத உயிருக்குப் பாதகஞ்செய்தவள்
ஐயமின்றி அது எனக்கொரு கொல்லாக்கொலை, அவனுக்கு எதுவும் தோன்றுவதில்லை
கணங்களில் விசைமிகும் உணர்வுபூர்வ மனஅழுத்தங்கள் வழி அதை மீள உணர்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick