பெரும்பரப்பில் பெய்த மழை - மகுடேசுவரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம் : பிரேம் டாவின்ஸி

70-களில் இரண்டு வகைப் படைப்பாளிகள் தோன்றினர். அதில் ஒரு தரப்பு பொதுத்தளத்தில் புகழ்பெற்ற புதுக்கவிதையை எழுதிக்கொண்டு நகர்ந்தது. இன்னொரு தரப்பு நவீன கவிதையின்பால் பற்றோடு வந்தது. கவிதைகளுக்கு அப்பால் கதைகூறு முறைகளிலும் செம்மையான மாற்றங்கள் ஏற்பட்டன. வட்டார வழக்கு இலக்கியமானது. ஜெயகாந்தனுக்குப் பிறகு நிலவிய கதைத்தளத்தில் நூற்றுக்கணக்
கானவர்கள் கதையெழுதத் தொடங்கினர். இந்தப் பின்னணி அனைத்தையும் கொண்டவராக இலக்கியத்தில் நுழைந்தவர்தாம் பாலகுமாரன். ‘முட்டி முட்டிப் பால்குடிக்கின்றன நீளக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள்’ என்று ‘கணையாழி’யில் வெளியான பாலகுமாரனின் கவிதையைப் பலரும் பாராட்டினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick