பதினைந்தாவது காடு - விஷ்ணுபுரம் சரவணன்

ஓவியம்: மனோகர்

ம்முறை
வனவாசம் புகத் தகுதியற்றதென
பதிநான்கு காடுகளை அவர் நிராகரித்தார்.
பழங்குடிகளும் நக்சல்பாரிகளும்
தியானத்துக்கு இடையூறாக இருக்கிறார்களாம்
யானைத் தந்தங்களும் மிருக எலும்புகளும் அச்சுறுத்தவும் செய்கின்றனவாம்
பர்ணசாலைக்கான வரைபடத்தில் செம்மரங்கள் முளைத்திருக்கின்றனவாம்
‘நல்’லெண்ணம் கொண்ட அரசு இடையூறுகளை அகற்றியது
(கனிம ஏற்றுமதியில் முன்னெப்போதுமில்லாத வளர்ச்சி கண்டது இவ்வாண்டில்)

ஆனபோதும்
அவரின் பயணம் வேறு காட்டை நோக்கித்தான் அமைந்தது,
இறக்குமதி செய்யப்பட்ட ஜீப்பில்
நீல நிற புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்து...

பதினைந்தாம் காட்டை நிராகரிக்கும்
மெயிலை அனுப்பும்போதுதான் கவனித்தார்,
உளவுத்துறையின் உச்சபட்ச பதவி உயர்வு ஆணையை
மின்னஞ்சலில் அனுப்பியிருந்தது அரசு (படு ரகசியமாக).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick