எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன் | Interview - Beyond Words - Neelakandan - Vikatan Thadam | விகடன் தடம்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இங்கேயும்... இப்போதும்...

தங்க.செங்கதிர்

“சாதி உமிழும் கொடும் கங்குகளின் வெம்மை, மனதுக்குள் வெந்து பழுத்துக்கிடக்கிறது. அதன் எதிர்வினையாய் உள்ளிருந்து எழும் கோபத் தெறிப்பே என்னளவில் எழுத்து. வெகுசமூகத்தின் பார்வையில் அது புலம்பலாகப் படலாம். ஆயின், என்போல் வெந்து தணிவோரின் இதயத்தில் அதற்கோர் ஆசனம் உண்டு. மொழி, என் உயிர்க்குறியீடு. அதுவே என் மரபின் அடையாளம். அதன் மேனியில் சிறு கீறலும் ஆகக் கூடாது என்கிற பொறுப்புணர்வுடனே என் எழுத்து உயிர்க்கிறது. என் தாத்தனுக்கும் பாட்டனுக்கும் கிடைக்காத பெருவெளி எனக்கு வாய்த்திருக்கிறது. அதில் நான் என் இருத்தலுக்கான காரணத்தை அழுத்தமாக விதைத்துவிட்டுச் செல்வேன், என் எழுத்தின் வழி.”

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகிலுள்ள புலியூரைச் சேர்ந்த தங்க.செங்கதிர், மேலநெட்டூர் ஆதிதிராவிடர் விடுதியில்  ‘ஆசிரியர் காப்பாளரா’கப் பணிபுரிகிறார். ‘கற்பி’, ‘மாற்றத்தின் குரல்’ ஆகிய 2 கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தை முன்னிறுத்தி ‘1957’ என்ற பெயரில் இவர் எழுதியுள்ள கட்டுரை நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது. நண்பர்களோடு இணைந்து ‘மானுடம்’ என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார். இயற்பெயர் செந்தில்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick