அடுத்து என்ன? - அகரமுதல்வன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
“பூமியின் புன்னகையைப் பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டேன்!”படங்கள் : க.பாலாஜி

‘நான் சமாதானத்தை நாடுகிறேன், அவர்களோ நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.’ என்றொரு வாக்கியம் பைபிளில் இருக்கிறது. தமிழீழர்கள் விரும்பிய சமாதானத்தையும் அமைதியையும் இவ்வையகம் இனப்படுகொலை நடத்திக் கொன்றொழித்துக்கொண்டிருந்த காலங்களில் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே என்னுடைய இலக்கியத்தின் விளைநிலம். போர்க்களத்தில் உயிர்பிழைத்த நிகழ்வுகளைக் கலையாக்குகையில் ஏற்படுகிற உளச்சிதைவை ஏற்றுக்கொண்டேன். என் எழுத்துவத்தின் நீண்ட நடமாட்டத்தில் என்றைக்கோ எனதுள்ளம் முழுமையும் சிதைந்துவிடுமோவென்று அஞ்சத் தோன்றுகிறது. யுத்த நாள்களில் வாழ்வது மட்டுமல்ல, அதை எழுதுவதும் கொடூரமானதாகவே இருக்கிறது. எனது இனத்தின் அவலக்குரலைக் கேட்கும் ஒரேயொரு செவியைக்கூட இவ்வுலகம் இன்னும் கொண்டிருக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick