நத்தையின் பாதை - 10 - செதுக்குகலையும் வெறியாட்டும் - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

றைந்த மணிக்கொடி காலகட்ட எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் என் கதைகள் இரண்டில் கதாபாத்திரமாக வந்திருக்கிறார்.அவரை நான் முதன்முதலில் சந்தித்தது 1992-ன் தொடக்கத்தில். நான் அருண்மொழியைத் திருமணம் செய்து சில மாதங்களே ஆகியிருந்தன. அருண்மொழியின் சித்தப்பா கலியமூர்த்தி கும்பகோணத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் எம்.வி.வெங்கட்ராம்-க்கு அணுக்கத்தொண்டர்போல. அவர்தான் “வாங்க மாப்பிளே, அவரு மணிக்கொடி எழுத்தாளர். பாத்திட்டு வருவோம்” என என்னை அழைத்தார். எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி எழுத்தாளர்களில் அன்று எஞ்சியிருந்த மூவரில் ஒருவர்.  

பழங்காலச் சிறிய வீடு. நீளமாக உள்ளே சென்று, குகையின் மறுவாயில் எனக் கொல்லைப் பக்கத்தைக் காட்டியது. பழைய வீடுகள் பொதுவாக மண்ணில் சற்று அமிழ்ந்திருக்கும். நன்கு குளிர்ந்த பெரிய திண்ணை. உள்ளே அங்கணம், அதில் எம்.வி.வெங்கட்ராம் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தார். செவிப்புலன் மிகக் குறைவு. கலியமூர்த்தி மாமா சாதாரணமாகவே வெடிக்குரலில் பேசுபவர். அவர் மேலும் வெடித்தால்தான் எம்.வி.வெங்கட்ராம்-க்குக் கொஞ்சமாவது கேட்கும். நான் பேசுவதை ஒலிப்பெருக்கம் செய்து எம்.வி.வெங்கட்ராம்-க்கு அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick