சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை | Nothing Beats moms food - Vikatan Thadam | விகடன் தடம்

சுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்! - பவா செல்லதுரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : வீ.சக்தி அருணகிரி

துவரை அம்மாவின் நினைவையும் அவள் தந்துபோயிருக்கும் ருசியையும் சேர்த்து எழுத்தில் மீட்டெடுக்காமல், உணவைப் பற்றி என்னால் ஒரு வரியையும் எழுதிவிட முடியாது. நேரம் தவறாமல் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு, இரண்டு வேளை காபி, டீ, என்ற வரையறைகள் நல் உணவிற்கு எதிரானவை. எப்போது ஒரு ருசியான உணவின்மீது ஆர்வம் மேலிடுகிறதோ, அதன் தேவை வேண்டி நாக்கு நம்மிடம் யாசிக்கத் தொடங்கும்முன், அவை நம் உணவுத் தட்டிலிருக்க வேண்டும்.

எப்போதும் அப்படித்தான் எங்கள்முன் ருசியான உணவை வைத்தாள் என் அம்மா. பலகாலம் ருசியால் எங்களை அடைகாத்து வைத்திருந்தவள் அவள். அந்த அட்சயப் பாத்திரத்திலிருந்து ஒரு துளியை மட்டும் இப்போது நான் வெளியே எடுக்கிறேன். அது குறைந்துவிடாமல், இன்னும் பல ஆண்டுகளுக்கு என் சொந்தச் சேமிப்புக் கிடங்கிலிருக்க மனம் விரும்புகிறது.

நிலப்பரப்பின் பொருட்டு உணவை வகைப்படுத்தலாம். அந்த நிலப்பரப்பில் எதன் விளைச்சல் அதிகமோ, அதுவே அந்தப் பிரதேச உணவையும் தீர்மானிக்கிறது. எங்கள் பூமியில் ‘மல்லாட்டை’, (வேர்க்கடலை அல்லது நிலக்கடலை) துவையலில் தொடங்கி முருங்கைக்கீரை, கருவாட்டுக் குழம்பு வரை அதன் இருப்பின்றி ஒரு சாப்பாட்டையும் நாங்கள் ருசித்ததில்லை. இரவுச் சாப்பாடு பெரும்பாலும் மண் தரையில் பாய்போட்டு, தெருப் பசங்களோடு சேர்ந்துதான். சுடுசாதம் வடித்த பாத்திரத்தை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வந்து வைக்கோலால் ஆன பிரமனையின்மீது கிடத்துவாள் அம்மா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick