கண்டனங்களின் பிரதிநிதி: கோபி கிருஷ்ணனின் படைப்புகளை முன்வைத்து சில சிந்தனைகள் - ஆதிரன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியங்கள் : மணிவண்ணன், பிரேம் டாவின்ஸி

மறுப்பு, தவிர்த்தல், நம்பிக்கையின்மையின் மீதான உற்சாகம் மற்றும் முரண்களின் மீதான காதல் ஆகியவை சுகாதாரத்தின் அறிகுறிகள்; இவையனைத்தும்  முற்றிலுமாக நோயியலுக்குச் சொந்தமானவை     

  -ஃப்ரெடரிக் நீட்ஷே.

னக்கு ஒவ்வாத ஒன்றை மறுப்பதை, அனுமதிக்காத யுகமாக இருக்கிறது சமகாலம். மறுப்பு என்கிற செயல்பாடு கண்டனத்திற்கு உரியது; அசுத்தமானது; மேலும் விபரீதமானதும்கூட. சமூகம் குறைத்து வைக்கப்பட்ட தணலில் கொதித்துப் பொங்கும் பாலைப்போல நிதானமாகப் பொங்கிக்கொண்டிருக்கும் புறத்தோற்றம் கொண்டது. உண்மை என்பது கொதித்துக்கொண்டிருக்கிறது. மேலும், சமூகம் பருண்மையாகவும் ஆழ்மன வகைமையிலும் சதா விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொங்கிக்கொண்டிருக்கிற, விரிவடைந்து கொண்டிருக்கிற சமூகத்தில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? பொங்குவதற்கு மாறாகச் சுண்டிக்கொண்டிருக்கிறார்கள். விரிவடைவதற்கு மாறாகச் சுருங்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுப்பை மறுக்கிற ஒரு சமூகத்தின் தனிமனித வாழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ‘வாழ்வது என்பது கிடைமட்டமாக விழுவது’ என்கிறார் ஃப்ரெஞ்சு எழுத்தாளர் ழான் காக்தோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்