கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

கவிதைகள் - எஸ்.சுதந்திரவல்லி

ஓவியம் : மணிவண்ணன்

மிதக்கும் பயணம்

மேலே மிதக்கும் பயணம்
கீழே நட்சத்திரங்கள்
பாதம் நோகும் குளிர்
சதைக்குள் ஊடுருவும் பனி
புகை உமிழும் ஒழுங்கற்ற மலைகள்
தற்கொலைக்குத் தூண்டும் உயரத்தின் அபார அழகு
சரிந்து இறங்கும் பள்ளத்தாக்கு
படிப்படியான நிலங்கள் விளைவிக்கும்
கேரட், பீட்ரூட், பூண்டு, முள்ளங்கி, நூல்கோல், முட்டைகோஸ்...
வான் நோக்கிய யூகலிப்டஸ் பரப்பும் நறுமணம்
பேய்கள் அப்பிய மூதாதை மரங்கள்
நிலக்கடலையின் உள்தோலைக் கசக்கித் தின்னும் அறிவுஜீவிக் குரங்குகள்
இரவு வளர்த்த நெருப்பு
சூரிய உடல் பனி உடலுக்குள் பூத்த
நீல அல்லி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick