கதைகளின் மீது நகரும் வெயில் - சக்தி ஜோதி | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

கதைகளின் மீது நகரும் வெயில் - சக்தி ஜோதி

சிற்பம் ராஜ்குமார் ஸ்தபதி

டிகாரம் பார்க்கத் தெரியாத முதியவள்
நினைவுகளைக்கொண்டே
தன் பொழுதுகளைக் கணக்கிடுகிறாள்
காலை வெயிலில்
தன்னுடைய கைகளைத்
திருப்பித் திருப்பிப் பார்த்தபடி
நீவிக்கொண்டிருக்குமவள்
ஏறத் தொடங்குகிற வெயிலினைப்போல
மென்மேலும் அதிகரிக்கிற
சுருக்கங்களின் வரிகளில்
அழிக்கவியலாமல்
நிரந்தரமாகப் பதிந்திருப்பவர்களைக் குறித்து
தனக்குள் பேசத் தொடங்கும்போது
காதை விரித்து
‘உம்’ கொட்டிக் கேட்டு நிற்கிறது
காலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick