நத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன் | Jayamohan New Series Naththaiyin paadhai - Vikatan Thadam | விகடன் தடம்

நத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

1986-ல் கேரளத்தை ஒரு கருத்துரிமைப் பிரச்னை உலுக்கியெடுத்தது. மலையாளத்தின் முதன்மையான நாடக இயக்கத் தலைவரும் தீவிர இடதுசாரியுமான பி.எம்.ஆண்டனி, ‘கிறிஸ்துவின்றே ஆறாம் திருமுறிவு’ (கிறிஸ்துவின் ஆறாவது புனிதப்புண்) எனும் நாடகத்தை எழுதி - இயக்கியதோடு, அதில் கிறிஸ்துவாக நடித்தும் அரங்கேற்றம் செய்தார். இந்நாடகம், ஆலப்புழா மாவட்டத்தில் எட்டு இடங்களில் நடைபெற்றது. திரிச்சூரில் மேலும் பத்து இடங்களில் நடைபெறவிருக்கையில், நாடகம் தடைசெய்யப்பட்டது.

இந்நாடகத்தின் முகப்பு வாசகமே உத்வேகமூட்டுவதாக இருந்தது. “தேவகுமாரன் அல்லாத ஏசு; வேசியல்லாத மேரி மக்தலேனா; காட்டிக்கொடுக்காத யூதாஸ்; திருடனல்லாத பாரபாஸ்”. ‘ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் உடலில் ஐந்து புண்கள் உருவாயின. ஆறாவதாக ஒன்று இதயத்தில் இருந்தது’ என்பதே நாடகத்தின் கருப்பொருள். ‘மேரி மக்தலேனா, ஏசுவின் காதலியும் மாணவியுமாக இருந்தாள்’ என நாடகம் குறிப்பிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick