“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்!” - ச.தமிழ்ச்செல்வன் | Books will be shows Right direction at dark times! - Vikatan Thadam | விகடன் தடம்

“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்!” - ச.தமிழ்ச்செல்வன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
படங்கள் : ஆர்.எம்.முத்துராஜ்

காலை நேரம்... சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் காலண்டர் தயாரிக்கும் ஆலைகளுக்கும் கிளம்பிச் சென்றுகொண்டிருக்கும் எளியவர்கள் நிறைந்த சாலை... சாலையிலிருந்து சற்று தொலைவிலுள்ளது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் வீடு. மஞ்சள் பூக்களாக உதிர்ந்துகிடந்த முற்றத்தில் நின்றபடி வரவேற்றார். வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் நடுவே அழகாக ஒரு நூலகம் அமைத்திருக்கிறார். புத்தகங்கள் வரவேற்க, நூலகத்துக்குள் நுழைந்தோம்.

எழுத்தாளர், பொதுவுடமை இயக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எனப் பன்முகம் கொண்டவர் ச.தமிழ்ச்செல்வன். அவரைப்போலவே அவரது நூலகமும் பன்முகத்தன்மையோடு இருக்கிறது. புத்தகங்களை அடுக்கிலிருந்து எடுக்கும்போதும், அதன் பக்கங்களைப் புரட்டும்போதும் பிறந்து இன்னும் கண்திறக்காத நாய்க்குட்டியைக் கையாள்வதைப்போன்ற கவனம் கொள்கிறார். அம்பேத்கர் - பெரியாரிய நூல்கள், மார்க்ஸிய நூல்கள், சினிமா நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பெண்ணெழுத்து எனப் புத்தகங்கள் தனித்தனி அடுக்குகளில் வகைமை சார்ந்து ராணுவ ஒழுங்கோடு அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.நூலகத்தின் சுவற்றில் கம்பீரமான ஓர் ஓவியம் மாட்டப்பட்டிருக்கிறது. “அந்த ஓவியத்தில் இருப்பது யார்?” என்ற கேள்விக்கு, “நீங்க கிளம்புறப்ப பதில் சொல்றேனே!” எனச் சிரித்த முகத்துடன் தனது வாசிப்பு, நூலகம் என மனதின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick