“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது!” - பாரதிராஜா | Interview with Tamil director P Bharathiraja - Vikatan Thadam | விகடன் தடம்

“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது!” - பாரதிராஜா

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: கே.ராஜசேகரன்

கூழாங்கல்லைக் கொடுத்தால், நட்சத்திரமாக்குவார்; நட்சத்திரத்தைக் கொடுத்தால், கூழாங்கல்லாக்குவார்.இரண்டும் தன்னளவில் இயற்கையின் பேரழகுகள்தான் என்றாலும், அதை உருமாற்றும் மந்திரவித்தையை சினிமாவுக்குள் ஒரு ஜனநாயக அரசியலாகவே செய்தார் பாரதிராஜா. தமிழர்களின் அழகியல் உணர்வை சினிமா வழியாக பாதித்தவர்களில் தவிர்க்க இயலாதவர். இவரும் இவரது சீடர்களுமாகத் தமிழ் சினிமாவை ஆண்டதொரு பொற்காலம். விவரம் அறிந்த நாள் முதல் கலையைப் பற்றிக்கொண்டவர், தனது 76-வது வயதிலும் முன்பைவிட வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஓம்’ படத்துக்கு பின்னணிக் குரல்கொடுக்கக் கிளம்பிக்கொண்டிருந்தவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். சொற்களைவிட அதிகம் பேசுகிறது உடல்மொழி, உதடுகளைவிட அதிகம் சிரிக்கின்றன கண்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick