அந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன் | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

அந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்

ஓவியம் : வேல்

ழமைபோலத்தான் அன்றும் எல்லாமும் நடந்தன
இதமான சூரியனும், மேய்ச்சல் நிலத்தின் பச்சயமும்
நியதிப்படி சீராகத்தானியங்கின.
அந்தப் பள்ளத்தாக்குகூட
தன் மதிய உறக்கத்தில்
வண்ணத்துப்பூச்சிகள் அனைத்துமே
வெண்ணிறமானதொரு கனவில்
சற்று இளைப்பாறியிருந்தன.
அருவிகளின் பேரீரைச்சலற்ற
அப்பரப்பின் அமைதியை
சிற்றோடைகள் ரசித்துக்
கிசுகிசுத்துக்கொண்டிருந்தன.
வழமைபோலத்தான் அன்றும்...
சுட்ட ரொட்டிகளின் எஞ்சிய
துணுக்குகளைத் தூக்கிச் சுமந்த
எறும்புகள்கூட
அதே பாதையில்...
அதே லயத்தில்...

மனிதச் சூட்டைத் தக்கவைத்திருந்த
சிறு கல்மேடையை முகர்ந்தபடி வெகுநேரம்
நின்றிருந்த குதிரைகளை
யாரோ அழைத்தார்கள்.
பழகிய பிஞ்சுக் குரலல்ல அது.
திரும்பி வராத சின்னஞ்சிறு காலடிகளைத்
தாங்கிய புல்வெளியிலிருந்து
அன்றிரவு திரும்பிய குதிரைகள்
அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை.

ஆஃசிபாவிற்காக...
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick