பாலன் - அகரமுதல்வன் | Short Story - Vikatan Thadam | விகடன் தடம்

பாலன் - அகரமுதல்வன்

ஓவியங்கள் : வேல்

தியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கையில் எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் காடொன்று தோன்றியதாம். அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள், மிகுந்த ஆரோக்கியமாக வாழத் தொடங்கினார்கள். சிறுவர்கள் காட்டுப்பழங்களை உண்டு மகிழ்ந்தார்கள். மர அணில்களைப் பிடித்து நெருப்பில் வாட்டினார்கள். முள்ளம்பன்றிகளை வேடிக்கையாக அடித்துக் கொன்றார்கள். முந்திரியம் பழங்களை ஆய்ந்த சிறுமிகள் அவற்றை ஒரேயொரு கடிகடித்து வனத்தின் பள்ளங்களில் எறிந்தார்கள். அதனாலேயே காட்டின் பச்சைய சுகந்தத்தில் செழிப்பு இசைந்துகொண்டிருந்தது.

அப்போது, சிறுமியாகவிருந்த உமையாள் பூப்பெய்தினாள். அவள் ஏறி நின்றுகொண்டிருந்த மரத்தைவிட்டு அச்சத்தோடு கீழே இறங்கி, தாயைத் தேடி ஓடினாள். காட்டின் மீது நின்றுகொண்டிருந்த வானம் மழையைத் தூவியது. காடு இருண்டு வெள்ளத்தில் அசைய முடியாத யானையைப்போல நின்றுகொண்டிருந்தது. என்ன பெயரென தமக்குத் தெரியாத பூவைப் பறித்து உமையாளுக்கு மாலை சூட்டினார்கள். தேவன், ‘வெளிச்சம் உண்டாகக் கடவது’ என்று சொல்வதற்கு முன்னரே உமையாளின் உடலிலிருந்து இப்பூமிக்கு வெளிச்சம் உண்டாயிற்று எனும் பேருண்மையை தேவனே அறிந்திருக்காத நேரத்தில் கலியன் சங்கெடுத்து ஊதினான். காடெங்கும் உமையாளின் கூந்தல்போலிருந்த நாணல்கள், காற்றைப் போர்த்தன. கலியன் தனது காதலியான உமையாளின் மார்பில் காட்டுப்பூவின் மொட்டைச் சூடினான். பூமியோ முதல்முறை சிலிர்த்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick