தன்னை அழிப்பதும் அரசியல்தான் | Self destruction is also an politics - Vikatan Thadam | விகடன் தடம்

தன்னை அழிப்பதும் அரசியல்தான்

அ.கா.பெருமாள், படங்கள் : சுகவன முருகன்

டந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், அரசியல் அல்லது பிற தலைவனின் மரணத்திற்கு அல்லது தலைவனுக்கு நேர்ந்த  பாதிப்பிற்காகத் தன்னை மாய்த்துக்கொண்டவர்களைப் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகள் விரிவாகவே வெளியிட்டிருக்கின்றன. அறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர்கள் மரணமடைந்தபோதும் இலங்கையில் பிரச்னை தலைதூக்கியபோதும் மூப்பனாருக்குக் கட்சியில் சிக்கல் ஏற்பட்டபோதும் எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். சிலர் தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். சிலர் பெருவிரலையோ நாக்கையோ அறுத்துக்கொண்டனர். இப்படியாக நடந்த இறப்பிற்கும் உடல் உறுப்பு இழப்பிற்கும் சில சமயம் மான்யமாக அனுதாப நிதியும் வழங்கப்பட்டதுண்டு. சிலரின் குடும்பத்திற்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

பெரும்பாலும் இந்தத் தற்கொலைகளை ஊடகங்களோ அரசியல் விமர்சகர்களோ விமர்சிப்பதில்லை. இது தவறான செயல் எனக் கண்டிப்பதில்லை. சில பத்திரிகைகள் இதுபோன்ற செய்திகளை மிகைப்படுத் தலுடன் வெளியிட்டிருக்கின்றன. பெரிய அரசியல் தலைவர்கள் இவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று பேசுவதில் முந்திக்கொள்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளனர். பரிக்‌ஷா ஞாநி போன்ற மிகச் சிலரே இச்செயலைக் கண்டித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick