சே குவேரா - சுதந்திரன் மற்றும் நிரந்தரன்

யமுனா ராஜேந்திரன் ஓவியங்கள் : பிரேம் டாவின்ஸி

சே குவேரா எனும் பெயர், சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில், அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் அவன்.

வரலாற்றின் போக்கினில் பற்பல புரட்சியாளர்களின் பெயர்கள் தேய்ந்துபோக, சே குவேரா எனும் பெயர் மட்டும் இன்னும் இன்னுமென ஒளிரக் காரணம் என்ன? உலக வரலாற்றில் இயேசு கிறிஸ்துவை அடுத்து தத்துவாதிகளையும், கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும், திரைப்பட மேதைகளையும் கவர்ந்தவர்களில் அவனே தலையானவன்.

அவன் மரணமுற்ற பொலிவிய மலையில், அம்மக்களுக்கு அவன் புனித சே குவேரா.

ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தலைமைத்துவப் போராளியாக அதிகம் வாசித்தவன்; படைப்பிலக்கியத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவன்; தனது அனுபவங்களை, தனது சிந்தனைகளை அதிகமும் எழுத்தில் பதிவுசெய்தவன் உலக வரலாற்றில் சே குவேராதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick