காஹா சத்தசஈ: பெருந்திணைக் குரல்கள்

லையும் இலக்கியமும் அரசியலும் வரலாறும் எப்போதும் ஆண்மையம் கொண்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றன. எல்லாக் காலங்களிலும், அழுத்தம் தாங்காத முனகல்களும் அரசியல் புரிதலுடன் காத்திரமாக எழுப்பப்பட்ட பெண்குரல்களும் உண்டு. எனினும், அவற்றில் தொகுக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட குரல்கள் மிகக் குறைவானவையே. மேலும், பெண்ணுடலை நுகர்வுக்கும் கண்காணிப்பிற்குமானதாகக் கற்பித்துவைத்திருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் பண்பாட்டு அமைப்பு, ஒவ்வொரு தன்னிலையின் நனவிலியிலும் அதன்வழியே உருவாகும் கலை இலக்கியத்திலும் ஒரு சுயதணிக்கையை உருவாக்கி
வைத்திருக்கிறது. சங்ககாலம் தொடங்கி, நவீனகாலம் வரையிலான இலக்கிய வெளியில் இதை நாம் காண முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick