“தமிழர் மரபு மிகுந்த நெருக்கடியான சூழலில் இருக்கிறது!”

மருதுசந்திப்பு: விஷ்ணுபுரம் சரவணன், வெ.நீலகண்டன்படங்கள்: கே.ராஜசேகரன்

ற்றே குறைந்த ஒளியில் எரியும் மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் மனவெழுச்சியை உருவாக்குகின்றன, தமிழ் நிலம் சார்ந்த ஓவியங்கள். சிற்பி தனபால் செதுக்கிய பெரியார் சிலையின் புகைப்படம், உலகளாவிய சித்திரங்கள் குறித்த புத்தகக் குவியல்கள், அரிய பல கலைப்பொருள்கள் நிரம்பிய அந்த அறையில், வெண்ணிற உடையில் வந்து அமர்கிறார் ஓவியர் மருது. பளீரென்ற அவரது இயல்பான சிரிப்பு, நொடிப்பொழுதில் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது. தமிழக ஓவியர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நிகழ்த்தியவர். ஓவியம், நாடகம், சினிமா, அனிமேஷன் என இவரின் களம் விரிவானது. மழைக்கான அறிகுறிகளோடு வானம் உறுமிக்கொண்டிருந்த மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்து உரையாடினோம்...

“ ‘டிராட்ஸ்கி’ பெயர் வந்த கதையோடு உரையாடலைத் தொடங்கலாமா?”

“மதுரை, கோரிப்பாளையத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். உடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள், நான்கு சகோதரிகள். அந்தக் காலத்திலிருந்த மதுரை வேறுமாதிரியானது. இப்போதிருக்கும் நரிமேடு, தல்லாகுளத்தைத் தாண்டி பெரிதாக ஊர்கள் கிடையாது. கோரிப்பாளையம், மாரியம்மன் கோயில் முதல்தெருவில், ஒன்றாம் எண்ணிலிருந்து ஐந்தாம் எண் வரைக்கும் எங்கள் வீடு. அப்பா பெயர் எம்.ஆர்.மருதப்பன். அம்மா பெயர், ருக்மணி அம்மாள். குடும்பத்தில் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் மருதப்பன், மருதாயி என்று பெயர்வைப்பது மரபு. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே பெயரை வைத்துவிட்டு, ‘சின்ன மருதப்பன்’, ‘பெரிய மருதப்பன்’ என்று அழைப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick