கவிதை - இசை, சுகுமாரன், கிரிஜா | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

கவிதை - இசை, சுகுமாரன், கிரிஜா

மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன்படங்கள் : புதுவை இளவேனில்

‘பரதக் கலைஞர் ராஜஸ்ரீ வாரியர், தமது ‘நர்த்தகி’ என்ற நூலின் முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார்: ‘மனம் சோர்வடைந்துபோகும்போதெல்லாம் உணர்வின் கரை நோக்கி என்னைத் திரும்ப அழைத்துச் சென்ற சஞ்சய் சுப்ரமணியனின் ஆனந்த பைரவி தில்லானாவுக்கு நன்றி.’  அது உண்மை! இசை தவிர்த்த பிற துறைப் படைப்பாளிகளின் செல்லப்பாடகர் என்று சஞ்சயைப் பாராட்டலாம். இங்கு இடம்பெறும் மூவரின் கவிதைகள் அதற்குச் சாட்சி’  - சுகுமாரன்

மகத்தான ஈ - இசை

நீள்விசும்பினில் உயரப் பறந்தும்
மா நிலத்திடை ஆழ உழுதும்
சஞ்சய் பாடுகிறார்
சஞ்சய் பாடுகையில்
மைக்கும் ஓர் இனிப்புப் பண்டம்தான்
அதன் வடவடப்பில் மொய்த்துக்கொண்டிருக்கிறது ஓர் ஈ
அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்
அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.
மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்
விரட்டுவதற்குப் பதிலே
அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.
அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென
மின்சார ஒயர்களின்மேல்
ஊர்ந்துகொண்டிருக்கிறது.
மகத்தான விஷயங்களின் மீது
ஈயாயிரு மடநெஞ்சே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick