ஆள் சாரா கணக்கு

ஷக்தி, ஓவியம் : மணிவண்ணன்

மிச்சமில்லாமல் முழுதாய் செத்து முடித்துவிட்டது. ஆண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக
நாளாவட்டத்தில் ஆதாரமாயிருக்கும் நானும் இந்த ரத்த ஒப்பந்தத்தில் போவேன்
அனுபூதி சித்தனைப்போல நினைவூட்டிப் பார்க்கிறேன்
பச்சையமற்றுப்போய் வாழும் உழவனின் நாட்குறிப்பெங்கும் பெருந்துயரின் கறை
ஒரு காலத்தைப் பிறிதொரு காலத்தில் பிறழக்கூறுதல் தவறுதான் - நானும்
உழுது விதைத்து அறுத்து கெட்டவனைப்போல் வாழ்வுக்கும் சாவுக்குமான உலகில்
வாழ்ந்து கெட்ட நாட்களைத் திமிலில் முதுகு முறியச் சுமந்து பேதலித்துக் கிடக்கிறவன்.

மூத்தவள் ஓடிப்போன பஞ்சாயத்துக்கு அந்நள்ளிரவில் கட்டுத்தறி வெறிச்சோடியது
சமரசமான இரவில் பேருறக்கம் தந்த கலயக் கள்ளுக்காக அசடு களையும் அரிவாளும்
தலை பிரண்டு கிடக்கென பிரசவத்துக்கு ஆணைக்குவளை நாலையும் விற்ற நிலை
இனி ஒருபோதும் நிகழாதிருக்க வேண்டிக்கொண்டேன்
மனைவி என்னை அகதியாய் விட்ட கருக்கலில் அவள் ஆசையாய் வைத்திருந்த
ஆரக்குவளை ஆறையும் அவள் அந்திமக்கிரியைக்காகக் கொடுத்துவிட்டேன்
பதினாறுக்கு அவளுக்குப் படைக்கையில் பார வண்டியை அனுப்பிவைத்த மாதத்தில்
கடப்படாதவன் இனி நான் என இளையவள் மணம் முடித்து வந்து நிற்கையில்
கட்டுமனையைக் கொடுத்து வந்ததில் அவளுக்குக் குறையெதுவும் வைக்கவில்லை
பருவகால உழவு நிலம்போல திக்கற்றவனுக்குச் சகுனம் பார்க்கும் காலம் கொடிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick