அடுத்து என்ன? - “கனவுகள் என்னை இயக்குகின்றன!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுனில் கிருஷ்ணன்

னவுகளில் என்ன கஞ்சத்தனம்? ஆகவே, அடுத்து என்ன என்றொரு கேள்விக்கு ஒரேயொரு பதிலைச் சொல்வதைக்காட்டிலும் என்னவெல்லாம் இந்த ஆண்டிலும் வரும் ஆண்டிலும் நிகழ்த்த விழைகிறேன் என்பதைப் பகிர்ந்துகொள்வது மேல். ஒருவகையில் பொதுவெளியில் பதிவாகும் சொல் ஓர் எச்சரிக்கை மணியைப்போல், ரப்பர் காலணியில் புதைந்த முள்ளைப்போல் எப்போதும் பிரக்ஞையைத் தீண்டியபடியே இருக்கும். ஆக்கசக்தியாக என்னை அது எழுதவைக்கலாம் அல்லது ஊக்கத்தை உரித்து வாட்டவும் செய்யலாம்.

சிறுகதை தொகுதிக்கு முன்பே நாவலாசிரியனாகத்தான் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். நான்கைந்து சிறுகதைகள் எழுதி முடித்த சூழலிலேயே ஒரு நாவலைத் தொடங்கினேன். நாவலின் மையக்கேள்வி என்னைப் பற்றி ஏறிக்கொண்டவுடன், அதன் முதல் வரியை எழுதும்முன் நாவலின் தலைப்பு துலங்கிவிட்டது. ‘நீலகண்டம்’ ஒரு மந்திரச்சொல்போல் என்னை ஆக்கிரமித்தது. விழுங்கவும் முடியாத, உமிழவும் முடியாத ஆலகாலத்தைக் கழுத்தில் என்றென்றைக்குமாக நிறுத்தப் போராடும் நீலகண்டர்கள். விடம் உண்ட கண்டர்கள் என்பதைக்காட்டிலும் விடம் சுரக்கும் கண்டர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick