மெய்ப்பொருள் காண் - சும்மா | Meiporul kaan - Novelist Imayam - Vikatan Thadam | விகடன் தடம்

மெய்ப்பொருள் காண் - சும்மா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இமையம்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் முதலிடத்தில் இருப்பது `சும்மா இரு’.

பொய், பாவனை, நாடகம், ஒன்றுமில்லை என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஞானிகள், யோகிகள், துறவிகள், மதபோதகர்கள் சொன்ன முக்கியமான வார்த்தையும், கடைசி வரை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொன்ன வார்த்தையும்; அதிகமாக விளக்கம் சொன்ன வார்த்தையும் ‘சும்மா இரு’ என்பது. அப்படியென்றால் அமைதியாக இரு, செயலின்மையில் இரு, பொறுப்பைத் துறந்துவிடு என்று அர்த்தம். உலகமெங்கும் ஞானத்தைத் தேடிச் சென்றவர்கள் எல்லோரும் கண்டடைந்த ஒரே விஷயமும், ஒரே சொல்லும் `சும்மா இரு’ என்பதுதான். சராசரி மனிதனிலிருந்து ஞானிகள், யோகிகள், மகான்கள் வரை அதிகமாக இந்த வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறார்கள்?

மனிதர்கள் பயன்படுத்துகிற பெரும்பாலான வார்த்தைகளுக்கு முன்னோட்டாக `சும்மா இரு’ என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. தெரிந்து சொல்கிறோமா தெரியாமல் சொல்கிறோமா, நம்முடைய மரபு அப்படி பழக்கியிருக்கிறதா?

ஒருவரை ஊக்கப்படுத்த நினைக்கும் நாம் ஏன் `சும்மா பாடு’, `சும்மா ஓடு’, `சும்மா பேசு’, `சும்மா படிச்சிப் பாரு’ என்று சொல்கிறோம். சும்மா என்றால் உண்மையில்லை என்று அர்த்தம். உண்மையில்லாத விஷயத்தையும் உண்மையில்லாத வார்த்தைகளையும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம்? ஊக்கப்படுத்துவதற்கு மட்டுமல்ல, ஒருவரை எச்சரிக்கை செய்யவும் இதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். `சும்மா பேசிக்கிட்டிருக்காத’, `சும்மா இருக்கமாட்டேன்’, `சும்மா அலட்டிக்காத’, `சும்மா விளையாடாத’ என்று. `சும்மா இரு’ என்பதற்கு நேரெதிரான விஷயத்துக்கும் இதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். `சும்மா இருக்காத’, `சும்மா படுத்திருக்காத’, `சும்மா தூங்கிக்கிட்டிருக்காத’, `சும்மா ஊரச்சுத்திக்கிட்டிருக்காத’, `சும்மா பொழுதபோக்காத’ என்று. சாதாரண விஷயங்களுக்கு மட்டுமல்ல, கோபமான நேரத்தில்கூட இதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறோம். `சும்மா எங்கிட்ட பேசிக்கிட்டிருக்காத’, `சும்மா சீண்டிக்கிட்டிருக்காத’ என்று. `சும்மா தூங்கு’ என்று சொல்கிற நாம், `சும்மா தூங்கிக்கிட்டிருக்காத’ என்றும் சொல்கிறோம். நாம் நிஜத்தைப் பேசவில்லை. பொய்தான் சொன்னோம் என்பதற்கும் இந்த வார்த்தைதான் பயன்படுகிறது. `சும்மா சிரிச்சேன்’, `சும்மா பார்த்தேன்’, `சும்மா பேசிக்கிட்டிருந்தேன்’, `சும்மா படுத்திருந்தேன்’. ஒரு நாளைக்கு எவ்வளவு ‘சும்மா’க்களைப் பயன்படுத்துகிறோம்?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick