‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை? | Karunanidhi and Annadurai needs to India - Vikatan thadam | விகடன் தடம்

‘திராவிட’ கலைஞர் ஏன் ‘இந்தியா’வுக்குத் தேவை?

காலத்தின் குரல்

லைஞர் இறந்ததையொட்டி நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக் கட்டுரைகள் எழுதப்படலாம்; எழுதப்பட வேண்டும். எண்பது ஆண்டுகால பொதுவாழ்க்கைகொண்ட கலைஞரின் அரசியற் செயற்பாடுகள், தமிழர்களின் வாழ்வில் குறுக்கும் நெறுக்குமாய் ஊடுபாவியிருக்கின்றன. ‘முரசொலி’யைக் கையெழுத்துப் பத்திரிகையாக நடத்திய காலம்தொட்டு, ஃபேஸ்புக்கில் தனக்கெனத் தனிப்பக்கம் ஆரம்பித்துப் பதிவிடுவதுவரை நான்கு தலைமுறைக் காலங்களில் நெடிய வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் அவர். வெறுமனே அரசியல் தலைவராக மட்டுமில்லாமல் கலை, இலக்கியம், இதழியல் என வெவ்வேறு களங்களில் இயங்கியவர் என்பதால், கலைஞர் குறித்து விரிவாக எழுதப்படுவது சாத்தியமும் தேவையுமாகும். ஆனால், இந்தக் கட்டுரை, கலைஞர் பெரியாரிடமிருந்து விலகிய புள்ளிகளில் அவரது இயங்குதளம் எப்படி இருந்தது என்பதை ஆராய முற்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick