நான் ஏன் எழுதுகிறேன்? | Why do I write? - young poets - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

நான் ஏன் எழுதுகிறேன்?

எஸ்.சுதந்திரவல்லி

நா
த்திகத்துக்கும் ஆத்திகத்துக்கும் இடையிலானது எனது எழுத்துகள். நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா என்னைத் தொட்டுப் பேசியதுகூட கிடையாது. சிறுவயதில் ஆரம்பித்த அந்த இடைவெளி, வளர்ந்த பிறகும் அப்படியே இருந்தது. எனது பதின் பருவத்தில் அப்பா குடிநோயாளியாக இருந்தார். வீட்டில் பெரும்பாலும் சண்டை நடக்கும். ஒரு கட்டத்தில் அக்கா மனச்சிதைவுக்கே உள்ளாகியிருந்தார். அந்தவிதமான பாதிப்புக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அதிலிருந்து என்னை மீட்டெடுக்க, புத்தகங்கள் அதிகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அது மட்டுமல்லாது, அந்த வயதில் எனது மனநிலையை சமப்படுத்த ஏனோ ஏதேனுமொரு நண்பனும் தேவைப்பட்டுக் கொண்டிருந்தான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க