ஒரு சிற்பியின் சுய சரிதை | Sculpture s.dhanapal autobiography - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஒரு சிற்பியின் சுய சரிதை

சிற்பி எஸ்.தனபால்

மிழின் கலைப்பெருமைகளுள் ஒருவர் சிற்பி எஸ்.தனபால். ஓவியம், சிற்பம், இசை, நடனம், நடிப்பு, தோட்டக்கலை எனக் கலையின் பெருவெளியில் சாத்தியங்களை ஒரு கனவுபோல விரித்துச் சென்றவர். மேற்கத்தியக் கலைக்கோட்பாடுகளை உள்வாங்கிச் செரித்தபடியே, இந்தியச் செவ்வியல் மற்றும் நாட்டார் அழகியலின் கூறுகளைத் தமது படைப்புகளில் முன்னெடுத்தவர். தமிழின் வரலாற்று நாயகர்கள் பலருக்கும் நண்பராக விளங்கியவர். 1993-ம் ஆண்டு, ‘ஆனந்த விகடன்’ இதழில் பத்து மாதங்களாக ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ என்ற தலைப்பில் தனபால் எழுதிய தொடரிலிருந்து, சிறுபகுதி மட்டும் அவரது நூற்றாண்டு நினைவின் பொருட்டு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.