கவிதை | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

கவிதை

என்.டி.ராஜ்குமார் - ஓவியம்: மு.சிந்துஜா

லைமுகட்டுக் கனிகளெல்லாம்
எங்கள் மூதாதைப் பட்சியர்கள்
எனது தோலும் அம்மையப்பன் தோலும்
மரப்பட்டைகளால் ஆனவை

உரித்தெடுத்தால் நீர் கசியும்
கண்ணீர் பாலெனச் சொட்டும்
ரத்தம் கசிந்துருகும்

கண்ணெழுதிச் செப்பில்
பிடித்தடைத்த பாலப்பூ
உள்ளிருந்து பேய் முரசு அடித்தாட
அண்ணாந்து பார்த்ததந்த மகா கனிகள்

சத்துப்போன இழை ஜந்துக்கள்
நால் காலிகள்
என்னுடைய நிறமுடைய மரப்பட்டிகள்

இதழ்கள் அறுந்து தெறித்த சிறியா நங்கைகள்
தலை அறுந்த பாம்பெனக் கிடக்கும் மேகலைகள்.

கூடுபொட்டிக் கிடக்கும் செஞ்சந்தனக் கூடுகள்
சிறகுதிர்த்து அழுது புலம்பும் பறவைகள்

வேர்பிடித்து நின்ற பாறைக்குள்
காவிலம்மையின் அரவமயிர்
சர்ப்பங்களாய் நெளிந்து பறக்க

ஒரு சில்வண்டின் இரைச்சலுடன்
ஒற்றைக்காலில் தவம் செய்தபடி
மரங்களுக்குள்
சுழன்றுகொண்டிருந்தன
எனது பம்பரங்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க