மெய்ப்பொருள் காண் - மேடு | Meiporul kaan - Stalin Rajangam - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

மெய்ப்பொருள் காண் - மேடு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழகத்தில் பல ஊர்களின், இடங்களின் பெயர்கள் ‘மேடு’ என்ற சொல்லோடு முடிகின்றன. ‘மேடு’ என்றதும் நமக்குள் தோன்றுவது என்ன? மண்ணாலும் கற்களாலும் ஆன குவியல். அதாவது பள்ளம், உயரம் என்ற எதிர்மறைகளில் உயர்ந்த பகுதியே மேடு. இந்தவகையில் ‘மேடு’ என்பதை நிலப்பரப்பின் ஒரு வடிவமாக மட்டுமே புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், அது பண்பாட்டு அர்த்தம் ஒன்றையும்கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியான அர்த்தம் சார்ந்த புரிதல் இல்லாமேலேயே அச்சொல்லை நாம் இப்போது வழங்கிவருகிறோம்.  அதாவது ஓர் ஊரோ, கட்டடமோ, குடியிருப்புகளோ அழிந்து மண்மேடாகிப்போன இடத்தையே நாம் பெரும்பாலும் மேடு என்றழைத்திருக்கிறோம். அந்த வகையில், அச்சொல், ‘மண்குவியல்’ என்ற பொதுவான அர்த்தத்திலிருந்து நீண்டு, ‘அழிவு’ என்பதைக் குறிப்பதாகவே இருக்கிறது.

மண்குவியல் எனும்போது, ‘இயற்கையான நிலப்பகுதி’ போன்று பொருள்பெறுகிறது.   ‘அழிவு’ எனும்போது இயற்கையான காரணங்களாலோ மற்ற காரணங்களாலோ நடந்த சேதாரங்களைக் குறிக்கிறது. அதாவது, அழிவுக்கு முன்னர் ஏதோ ஒன்று அங்கிருந்தது என்றாகிறது. இவ்விடத்தில் ‘மேடு’ என்ற சொல் ஒரு வரலாற்றுப் பண்பை அடைந்துவிடுகிறது. அதற்கடுத்து ஏன் அழிந்தது? எது அழிந்தது? என்கிற கேள்விகள் உண்டாகிவிடுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க