அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும் | Interview with Veera Pandiyan - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

அடுத்து என்ன? - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

க.வீரபாண்டியன்

‘பகடு’ நான் எழுதிக்கொண்டிருக்கும் அடுத்த நாவல். ‘பகடு’ என்னும் இந்தச் சொல் வலிமை, பெருமை, எருது போன்ற பல்வேறு பொருள்களைத் தாங்கி நின்றாலும், யானை எனும் பொருள்தான் இந்த நாவலுக்கானது. யானை, காடுகளில் வாழ்ந்து திரியும் சுதந்திர வாழ்க்கை வாய்க்கப்பெற்ற ஓர் உயிரி. காடுகளிலிருந்து இழுத்துவரப்பட்டுப் போர்களில் ஈடுபடுத்தப்பட்டபோதும் அதற்கான மரியாதைகள் தவறாமல் செய்யப்பட்டன. வலிமை, பெருமை மற்றும் வீரத்தின் அடையாளமாக எல்லா நாட்டிலும் யானைகள் கம்பீரமாக உலவிவந்தன. ஆனால், இன்றைக்குக் கோயில்களுக்கு வெளியேயும் வீதிகளிலும் கையேந்தி அலையும் வாழ்வு. அவ்வாறான வாழ்க்கை வாய்க்கப்பட்ட சக்கிலிகளின் இன்றைய வாழ்க்கையை வரலாற்றில் பொருத்திவைத்துப் பார்க்கும் படைப்பாக ‘பகடு’ உருவாகியிருக்கிறது.

என்னோடு பிறந்தோரும் உடன் வாழும் சுற்றத்தாரும் சகமனிதர்களால் வரலாறு நெடுகிலும் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் மிகமோசமான இழிநிலைகளைச் சுமந்தபடி வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான இழிநிலைகளிலேயே உழன்று கிடக்காமல் போராடும் குணத்தைத் தனதாக்கிக்கொண்ட சமூகத்தின் அந்தரங்க வாழ்வு, பரிதாபகரமான கழிவிரக்கத்தோடு காட்டப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கண்டு மனம் குமைந்த கணத்தில் உருவான கோபத்தை, ஒரு படைப்பாக உருத்திரட்டத் தொடங்கினேன். தெருக்கூட்டுதல், கையால் மலம் அள்ளுதல் முதலான இழிதொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நிர்பந்தத்தின் ஒடுக்குமுறைகள், நகர விரிவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிதைந்து நசியும் வாழ்க்கைப்பாடுகளென இரண்டு தளங்களிலும் எதிர்கொள்ளும் வாழ்க்கையை இந்நாவல் பேசுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க