நான் ஏன் எழுதுகிறேன்? | Interview with young poets - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

நான் ஏன் எழுதுகிறேன்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நவீனா

வீனா, தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது, கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆப்பிரிக்கப் பெண் எழுத்துகள் குறித்து முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். பெண்ணியம் சார்ந்தும், கிரேக்க மற்றும் ரோமானியப் புராணக் கதைகளைத் தழுவியும் இரண்டு ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ‘லிலித்தும் ஆதாமும்’ என்கிற இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு தமிழில் வெளியாகியுள்ளது.

தமிழில் கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குவதற்கு அடித்தளமாக அமைந்த வாசிப்பின் அடுத்தகட்டமாக எழுத்து தென்பட்டது. சமூகத்திடமிருந்தும், அதைச் சார்ந்து வாழும் மனிதர்களிடமிருந்தும், அவர்கள் படைக்கும் இலக்கியங்களிடமிருந்தும், பல அறிவைத் திரட்டிக்கொண்ட பிறகு, அதை முறைப்படி அடுத்துவரும் தலைமுறைகளுக்குச் சென்று சேருமாறு ஏதோ ஒரு கலை வடிவில் விட்டுச் சென்றவர்களால்தான்,  இன்று கலைகளும் இலக்கியங்களும், வரலாறுகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில், என்னைச் சுற்றி நிகழும் அனைத்தின்மீதான எனது புரிதல்களையும் அறிவையும் எழுத்துகளாகப் பதிவு செய்வதை எனது இயல்பான கடமையாகவே கருதுகிறேன். மேலும், எழுத்து எனும் உலகம் நான் நானாக இருப்பதை அனுமதிக்கிறது. உண்மையில் நான் வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப் பதற்கான மகிழ்ச்சியையும் நிறைவையும் என்னிடத்தில் அது விட்டுச்செல்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க