சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து | 40 Years of Cinema mania - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஷாஜி, ஓவியங்கள் : ரவி

‘‘இதுல படிச்சுத் தெரிஞ்சுக்க ஆயிரம் விசயமிருக்கு சார். படிக்கத் தெரியலேன்னாலும் பரவாயில்ல. பள்ளிக்கூடம் தொறக்குற நேரத்துல கொழந்தைங்களோட புத்தகத்துக்குச் சட்ட போடலாமே! அருமையான ஆயில் பேப்பரு. தொட்டுப் பாருங்க” -சோவியத் இதழ்களுக்குச் சந்தா சேர்க்கும் வேலைக்காக அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கைப் பயணிகளிடம் அவ்விதழ்களின் அருமைபெருமைகளை விளக்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முன்னால் நின்றுகொண்டிருந்த ஆளைக் கவனித்தேன். நடத்துநரின் கையிலிருந்து சில காகிதங்களை வாங்கிப் பரிசோதித்துக்
கொண்டிருந்தார். நன்கு பரிச்சயமான முகம். ஐயோ... இவர் ஒரு சினிமா நடிகர் அல்லவா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க