அறம் ஒலித்த அரங்கம்! | Ananda Vikatan Nambikkai Awards 2018 - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

அறம் ஒலித்த அரங்கம்!

ரு சமூகம், செயலூக்கம்கொண்ட புதிய சிந்தனைகளாலும் கற்பனைகளாலும் தொய்வறியா செயல்பாடுகளாலும் தன்னைப் புதுப்பித்துத் தகவமைத்துக் கொள்கிறது. இச்செயல்பாட்டில், தன்னலமற்ற சமூகச் செயல் களம் காணும் மனிதர்கள், அதன் ஆதார உயிர்சக்தியாக இருக்கிறார்கள். அப்படி, தமிழ்ச் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்குக் காரணமாக இருக்கும் ஆளுமைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது ‘ஆனந்த விகடன்’. கடந்த ஆண்டில் சமூக, கலை இலக்கிய, ஊடகத்துறைகளில் முக்கியப் பங்களித்தவர்களைக் கொண்டாடும் ‘நம்பிக்கை விருது விழா - 2018’, சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 09.01.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.