நான் என்ன செய்கிறேன்? | Indian theatre and film actress and singer K.B. Sundarambal - Vikatan thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

நான் என்ன செய்கிறேன்?

ருடம் ஞாபகமில்லை. நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சம்பவம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கே.பி. சுந்தராம்பாள் நடித்த படம் ஒன்றை வீட்டுக்குத் தெரியாமல் போய் பார்த்துவிட்டுத் திரும்பினார். ‘பக்த நந்தனார்’ என்று நினைக்கிறேன். அதிலே கே.பி.எஸ் 30 பாடல்கள் பாடியிருக்கிறார். அண்ணர் 15 வயது துணிச்சலில் ஏதாவது செய்வாரே ஒழிய, அவருக்குக் கள்ளம் செய்யத் தெரியாது. கறுப்புத் தலைமயிர் சரிந்து நெற்றியோடு ஒட்டிக்கிடக்க,  கைகளை நெஞ்சுக்குக் கிட்ட தூக்கிப் பிடித்தபடி நடப்பார். முதல் இரண்டு நிமிடத்தில் பிடிபட்டுப்போவார்.

அன்று நல்ல அடி கிடைத்தது. அழும்போது மூச்சை உள்ளே இழுத்துவிடுவார். அதை மீட்டு எடுக்கும்போது இன்னொரு அடி விழும். அன்று இரவு அழுதபடி, கைவிளக்கைக் கொளுத்திவைத்து  நெடுநேரம் ஏதோ எழுதினார். அடுத்த நாள் காலை அவர் கே.பி.சுந்தராம்பாளுக்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிலே போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கடிதத்தைப் படித்து கேலி செய்தார்கள். அவர் கே.பி.எஸ்-ன் நடிப்பையும் பாடல்களையும் அப்படித் தலைகால் தெரியாமல்  பாராட்டினார். இசைராணி, இசைக்குயில், இசை சக்கரவர்த்தினி என்று பலவிதமான பட்டங்களைச் சூட்டியிருந்தார். ‘உங்கள் இசை என் உடம்பினுள் புகுந்து என் ஆத்மாவுடன் கலந்து என்னைப் பரவசத்தின் உச்சிக்கே கொண்டுபோனது’ என்பதுபோல எழுதி முடித்திருந்தார். பரிதாபம் என்னவென்றால், அடி வாங்கி, இரண்டு மணி நேரம் செலவழித்து எழுதிய கடிதம் தபால்பெட்டியினுள் போடப்படவே இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க