தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள் | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

தற்கொலைக் கடிதங்களுக்கு ஒற்று பார்ப்பவள்

தேவசீமா

ச்சியிலிருந்து
ஓசைபடாமல் சுழன்று சுழன்று
தரை தொடும் ஒரு மலரினைப்போல்
இருக்கட்டும் அவளின் தற்கொலை
விடுதலை
அவனாய் அதுவாய் வெளியாய்
மாற எத்தனம்கொண்டே இருக்கிறாள் அவள்
எத்தனை பேர் இருந்தும்
ஒரு கீறல்கூட இல்லை கண்ணாடியின் மீது
அது நொறுங்கிய ஓசை
யார் காதுக்கும் இல்லை என்பதை அறிவாள்
நொறுவல்களின்மேல் நடந்தே
அடைந்தாள் வெள்ளை நிற விடிமோட்சங்களை
துரோகங்கள் இழைக்கப்படுவதல்ல
ஏற்றுக்கொள்ளப்படுவது
என நம்பும் அவளின்
கடைசி அலைபேசி அழைப்பையாவது
நீங்கள் எடுத்திருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க