ஹேப்பி இன்று முதல் ஹேப்பி | Poetry - Vikatan Thadam | விகடன் தடம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

காலத்தச்சன், ஓவியம் : மணிவண்ணன்

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

நெஞ்சில் பழமரம் நடு
பறவைகள் வந்து பாடுமென்றான் கீழைத்தேய ஞானி
நம்பி நட்ட மறுகணம்
அடிமரமதிர்ந்தது

கொழுந்துதிர
பூவுதிர
பிஞ்சுதிர
தாடைதாண்டி காது நீண்ட ததாகதன்
நெஞ்சிலறைந்தபடி எழுந்தோடினான்
வீட்டின் மென்னிவரை
அதிகரிக்கத் தொடங்கியது சருகுக்கடல்
புகைபோக்கியின் வழியே
ஜூட்விட்டாள் மனைமாட்சியொழுகும் மாதரசி
தாள்படகேறித் தப்பியோடின குழந்தைகள்
நாய்வேடம் தரித்த தர்மதேவதையும்
விட்டேன் சவாரியென வெளிக்கிட்டது

நீங்க எப்படி பீல் பண்றீங்க