“விமர்சனங்களைப் புரிந்துகொள்ள முயல்கிறேன்!” - பெருமாள் முருகன்

“ ‘மாதொருபாகன்’ நாவலுக்கு முன் - ‘மாதொருபாகன்’ நாவலுக்குப் பின் என்று சொல்லும் அளவுக்கு, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளருக்குள் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்க்கிறோம். இது குறித்து விரிவாகச் சொல்லுங்கள்...”

“நாவலுக்கு முந்தையவரும் பிந்தையவரும் உடலளவில் ஒருவர்தான். அது ஒன்றுதான் ஒற்றுமை; வேற்றுமைகள் பல. படைப்பு பற்றிய பார்வையில் இருவருக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. எதார்த்தவாதம், இயல்புவாதம் ஆகிய எழுத்துமுறைகளில் வலுவாகக் காலூன்றி நின்றவர் முன்னவர். அதனடிப்படையில் எழுதப்படாத நிலப்பகுதிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் அவருக்குண்டு. பெரிய தணிக்கை இல்லாமல் எதையும் நேரடியாக எழுதும் வேகமும் மனத்துணிவும் அவருக்கு இருந்தன. அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவது குறித்துச் சிந்திப்பதும் விடுபட முயல்வதுமாகப் பின்னவர் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick